ஒடிசாவில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் மற்றும் பாஜக.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கிராமபுற உள்ளாட்சி களுக்கான தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 78.68 சதவீத வாக்குபதிவு பதிவானது. இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த நிலையில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தம் 786 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளது.

பாரதிய ஜனதா 40 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட தற்போது பாஜகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha local election results


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->