மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒடிசா முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள்..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதில் முன்பு ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அங்கு முதல் முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

அங்கு பாஜகவின் மோகன் சரண் மாஜி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் துணை முதல்வர்களாக பாஜகவின் கனக்வர்தன் சிங் தியோ மற்றும் பிரவாதி பரிதா ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, துணை முதல்வர்கள் இருவருடனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை நேரில் சந்தித்தனர். 

இதையடுத்து இன்று காலை மூவரும் புது டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திற்குச் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர்கள் மூவரும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் அமைச்சர் ஜே. பி. நட்டா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha CM and Deputy CMs Paid Tribute at Mahatma Gandhi Memorial


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->