தமிழக அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை! எளியவர்களின் நிலையறிந்து கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்...!
O Panneerselvams request TN government loans cooperative society members waived after understanding condition poor
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரகள், 'கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யு வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:
அதில் தெரிவித்ததாவது,"தமிழ்நாடு அரசால்,வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையிலுள்ள கடனை வசூலிக்க அடிக்கடி அபராத வட்டி, EMI வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்தனர்.
கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், இருப்பினும் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்,தற்போது நிலுவையிலுள்ள ரூ.1000 கோடி கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்; ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, EMI வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், அபராத வட்டி, EMI வட்டி மற்றும் இதர வட்டி தள்ளுபடி திட்டத்தினை அறிவிக்கவும், ஏற்கெனவே நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு பத்திரங்களை விரைந்து வழங்கவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்து தற்போது வரவேற்கத்தக்க விதமாக மாறியுள்ளது.
English Summary
O Panneerselvams request TN government loans cooperative society members waived after understanding condition poor