வெடிகுண்டு வீசி கொலை முயற்சி; சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்! - சீமான் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில், பாமக மாநில நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது, ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்த  முகமூடி அணிந்த கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது; 

திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள்  அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுவது  வாடிக்கையாகிவிட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த  2024 ஜூலை மாதம் பகுஜன்  சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் காங்கிரசு கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயக்குமாரும், 
ஜூலை மாதம் 3 ஆம் நாள் அதிமுக கொண்டாலம்பட்டி பகுதிச்செயலாளர்  சண்முகமும், ஜூலை 16 ஆம் நாள் நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர் சி.பாலசுப்ரமணியமும், 
ஜூலை 27 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட பாஜக கூட்டுறவு அணிச் செயலாளர் செல்வகுமாரும் 
வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் கடந்த 2024 முதல் ஓராண்டிற்குள் நடந்த படுகொலைகள் மட்டுமே. நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரசு, கம்யூனிஸ்ட், விசிக பிரமுகர்களும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்துள்ளது.

 பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. 

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.  பட்டப்பகலில் நடைபெறும்  படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை.   இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய  எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள்  ஒவ்வொரு சாமானியன்  மனதிலும் எழுகிறது. 

ஆகவே, பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற  கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக்  கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது  காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து  சீர்செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Condemn to PMK Ma Ka Stalin Attack


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->