ஹமாஸ்–இஸ்ரேல் போர்நிறுத்தம்...! தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்...!
Hamas Israel ceasefire US President Trump intensive talks
கடந்த 2 ஆண்டுகளாக,இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கிடையேயான போர் நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 64,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.இதனிடையே, இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

இதற்காக ஏற்கனவே அவர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை 2 முறை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில், ஓரிரு வாரங்களில் போர்நிறுத்தம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையையும் டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும், காசா மீது இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
இதன் நடுவே, ஹமாஸ் அமைப்பினருடன் போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்:
மேலும், வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தகாவது,"நாங்கள் தற்போது ஹமாஸ் அமைப்பினருடன் ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் விடுவிக்கப்பட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்; தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும். ஹமாஸ் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது; அவை நியாயமானவையே,” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Hamas Israel ceasefire US President Trump intensive talks