அபே படுகொலை வழக்கில் தீர்ப்பு..!அரசியல் கொலையின் இறுதி அத்தியாயம்: யமகமிக்கு ஆயுள்
Verdict Abe assassination case final chapter political murder Yamagami sentenced life imprisonment
ஜப்பான் அரசியல் வரலாற்றையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவத்தின் இறுதிக்கட்டம் இப்போது நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நாரா நகரில் தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, திடீரென நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்து உலகையே உறைய வைத்தார்.

இந்த கொடூர தாக்குதலை நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் சம்பவ இடத்திலேயே சுற்றிவளைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அவர் தனது குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், உலக கவனத்தை ஈர்த்த இந்த அரசியல் படுகொலை வழக்கில், குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு, ஜப்பானில் அரசியல் பாதுகாப்பு மற்றும் தலைவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது.
English Summary
Verdict Abe assassination case final chapter political murder Yamagami sentenced life imprisonment