''உலககின் எந்தத் தலைவரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை: பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் முழு மூச்சாக செயல்படுகிறது'': லோக்சபாவில் மோடி பேச்சு..!
No world leader has asked to stop the war Modi says in Lok Sabha
லோக்சபாவில் ' ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான விவாதம் ஒன்றிய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசாரமாக நடைபெற்றுவருகிறது. இதன் போது 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பிரதமர் மோடி விளக்கியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது:
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, உலகின் எந்தத் தலைவரும் தாக்குதலை நிறுத்தும்படி சொல்லவில்லை,'' என திட்டவட்டமாக கூறியுள்ளார். அத்துடன், பாகிஸ்தானால் இனி அணு ஆயுத அச்சுறுத்தல் விட முடியாது என்றும், இந்தியா ஒரு போதும் அவர்களுக்கு பயப்படாது என்றும் பேசியுள்ளார்.
அத்துடன், எந்த மிரட்டலுக்கும் இந்தியா அடிபணியவில்லை என்றும், இனி யாரும் நம்மிடம் அணு ஆயுத மிரட்டல் விட முடியாது. எதிரிகளை நமது படையினர் நிலைகுலையச் செய்தனர் என்றும் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-sqbep.png)
ஒன்றிய அரசு இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியதாகவும், முப்படைகளும் கூட்டாக இணைந்து செயல்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாகிஸ்தானின் சில விமான படை தளங்கள் இன்னும் ஐசியூ.,வில் உள்ளதாகவும், பஹல்காம் தாக்குதல் நடந்ததும், இந்தியா பதிலடி தரும் பாகிஸ்தானுக்கு தெரிந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் மேலும் அவையில் கூறியதாவது: இந்த ஆபரேஷன் மூலம் இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளதாகவும், பாகிஸ்தான் வாலாட்டி பார்த்தது. ஆனால் நாம் அவர்களை மண்டியிட வைத்தோம் என்றும் பேசியுள்ளார்.
மேலும், இந்தியாவின் நடவடிக்கைக்கு எந்த நாடுகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும், ஐ.நா.,வில் உள்ள 193 நாடுகளில் 03 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததாகவும், 22 நிமிடங்களில் பாகிஸ்தானை பழிதீர்த்தோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நடவடிக்கையால் பயங்கரவாதிகள் கதறி துடித்ததாகவும், பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கையை எந்த நாடும் கண்டிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளை பிரித்துப் பார்க்க முடியாது. இனி இந்தியா பதிலடி கொடுக்கும் என பயங்கரவாதிகளுக்கு தெரிந்துவிட்டதாக மோடி தெரிவித்துள்ளார்.
-657cy.png)
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால் காங்கிரசின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார். இதன் போது காங்கிரசின் விமர்சனம், ஆயதப்படைகளின் மாண்பை குழைத்தன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்திய அரசையும், பாதுகாப்பு படையினரையும் மட்டம் தட்டவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயன்றன என்றும், எதிர்க்கட்சிகளின் கருத்து, இந்திய எல்லைக்கு வெளியே இருந்து வருவதைப் போன்றே இருந்தன என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சிகள் என்னையே குறிவைத்து தாக்கின. மோடி தோற்றுவிட்டார் என காங்கிரஸ் சந்தேகம் அடைந்ததாகவும், இந்தியா மீதும், ராணுவம் மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், மக்கள் மனங்களை காங்கிரசால் வெல்ல முடியாது என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் முழு மூச்சாக செயல்படுகிறதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை 100 சதவீதம் விமானப்படை உறுதி செய்தது. இந்த நடவடிக்கையின் குறிக்கோள் மிகத்தெளிவாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எங்கள் இலக்கு பயங்கரவாதத்துக்கு எதிரானது என உலகத்துக்கே தெரிவித்துவிட்டோம் என்றும் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தானை மண்டியிட வைத்ததோடு, பயங்கரவாத்தின் மையத்தை வேரோடு அழித்துவிட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-sqbep.png)
இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் தயவு செய்துபதிலடியை நிறுத்துங்கள் என கெஞ்சியது. இதற்கு மேல் தாங்க முடியாது என கதறியதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். நமது பதிலடியை பல ஆண்டுகளுக்கு காங்கிரஸ் நினைவில் வைத்து இருக்கும் என்றும், அமெரிக்க துணை அதிபர் மே 0-ஆம் தேதி என்னிடம் பேச முயன்றார். ஆனால் நான் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன் உலகத்தின் எந்தத் தலைவரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை என்றும், பாகிஸ்தான் இந்தியா மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தெரிவித்தார் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நான் 'அப்படி நடத்தினால், கடுமையான பதிலடி' கொடுக்கப்படும் என தெரிவித்ததாக கோரியுள்ளார். இனி பாகிஸ்தான் என்ன செய்தாலும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்தியா முழு சக்தியுடன் தொடர்ந்து முன்னேறுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்'நடவடிக்கை இன்னும் தொடர்கிறதாகவும், இனியும் பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ன்பிரதமர் மோடி லோக்சபாவில் மேலும் பேசியுள்ளார்.
English Summary
No world leader has asked to stop the war Modi says in Lok Sabha