பாஜ தேசிய செயல் தலைவர் நியமனம்; யார் இந்த நிதின் நபின் சின்ஹா..?
Nitin Nabin Sinha appointed as BJP National President
பாஜவின் தேசிய தலைவராக, 2020 பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சர் நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். இருப்பினும் ,லோக்சபா தேர்தலை கருதி, நட்டாவுக்கு தேசிய செயல் தலைவர் பதவி நீட்டிக்கப்பட்டது.
நடந்து முடிந்த பீஹார் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. தற்போது ஜே .பி. நட்டா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், கட்சியின் புதிய செயல் தலைவர் நியமனம் குறித்து சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்-ஷா, நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். முடிவில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் சின்ஹா, கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பீஹாரை சேர்ந்த நிதின் நபின், பாஜ மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன் ஆவார். பங்கிப்பூர் சட்டசபை தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்குமுறை வெற்றி பெற்றுள்ள இவர், தற்போது பீஹாரில் சாலை கட்டுமானத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Nitin Nabin Sinha appointed as BJP National President