#BREAKING:: அதிமுக விவகாரம்.."இபிஎஸ்-ஐ அங்கீகரிக்கக் கூடாது".. டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்..!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலைமையில் உள்ள அதிமுக பொது குழு தொடர்பான வழக்குகளின் மீதான இறுதி உத்தரவு வரும் வரையில் இந்திய தேர்தல் ஆணையம் எந்த ஒரு இறுதி முடிவையும் எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது.

அந்த மனுக்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் உரிய முடிவை எடுக்கவில்லை. எனவே அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்'' என டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீது உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம்" நாளைக்குள் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்திரவிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தற்போது 2 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சூரியன் பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய மனுக்கள் கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநில தேர்தலில் வேட்டு மனு தாக்கல் நாளையுடன் முடிவடை உள்ள நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New petition filed in delhiHC against EPS


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->