திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
Nellai DMk Member home attacked in petrol bomb
நெல்லை மாவட்டம் முன்னீர்ப்பளத்தில் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் செல்லசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம இளைஞர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் வீட்டில் நின்றிருந்த கார் உட்பட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தன.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாதுகாப்பை உறுதி செய்ததுடன் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது..
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Nellai DMk Member home attacked in petrol bomb