முகம் பளபளன்னு ஜொலிக்க வேண்டுமா?கறிவேப்பிலை பயன்படுத்தி ஜொலிக்க வைக்கலாம்!எப்படி தெரியுமா?
Do you want your face to glow You can make it glow using curry leaves Do you know how
இன்றைய வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களும் பலருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. அதில் சருமம் தொடர்பான பிரச்சனைகள் முக்கியமானவை. முகப்பரு, சுருக்கங்கள், எரிச்சல், வறட்சியம், சிவத்தல் போன்றவை பெரும்பாலும் காணப்படும் பிரச்சனைகளாகும்.
இந்த பிரச்சனைகளுக்கு பலர் மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் அடிப்படையிலான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை சில நேரங்களில் பிரச்சனையை அதிகரிக்கும் அபாயமும் உண்டு. எனவே இயற்கை வழிகளைப் பின்பற்றுவது சிறந்தது. அந்த வகையில், சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை சருமத்திற்கு அற்புதமான நன்மைகளை அளிக்கக்கூடியது.
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் A, C, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இயற்கை எண்ணெய்கள் போன்றவை சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
கறிவேப்பிலையின் முக்கிய நன்மைகள்:
பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு
கறிவேப்பிலை முகப்பரு மற்றும் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
இதன் எண்ணெய் முகப்பரு மற்றும் அரிப்பை குறைக்க உதவுகிறது.
சுருக்கங்கள் மற்றும் வயது தடுக்கும் தன்மை
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சரும சுருக்கங்களை குறைக்க உதவுகின்றன.
வைட்டமின் A, C கொலாஜன் உற்பத்தியை தூண்டி சருமத்தின் நெகிழ்ச்சியை அதிகரிக்கின்றன.
இயற்கை ஈரப்பதம்
கறிவேப்பிலையிலுள்ள இயற்கை எண்ணெய்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்து, மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகின்றன.
அலர்ஜி எதிர்ப்பு
முகப்பரு, அரிப்பு, எரிச்சல், தடிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும்.
காயங்களையும் விரைவாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.
சருமத்திற்கு கறிவேப்பிலையைப் பயன்படுத்தும் வழிகள்:
கறிவேப்பிலை + மஞ்சள் ஃபேஸ் பேக்
கறிவேப்பிலையை அரைத்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும்.
15 நிமிடங்கள் வைத்துவிட்டு கழுவினால் முகப்பரு மற்றும் வீக்கம் குறையும்.
கறிவேப்பிலை + கற்றாழை ஜெல்
கறிவேப்பிலை பேஸ்டுடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவவும்.
உலர்ந்தபின் கழுவினால் எரிச்சல் மற்றும் வீக்கம் குறையும்.
கறிவேப்பிலை + தேன்
கறிவேப்பிலையை தேனுடன் கலந்து முகத்தில் 15 நிமிடங்கள் தடவி வைத்து சூடான நீரில் கழுவவும்.
இது சரும நிறமியை குறைத்து, பிரகாசத்தை அதிகரிக்கும்.
கறிவேப்பிலை + தயிர்
அரைத்த கறிவேப்பிலையுடன் தயிர் சேர்த்து 20 நிமிடங்கள் முகத்தில் தடவவும்.
இது சருமத்தை ஈரப்பதமாகவும் ஊட்டமளிக்கக் கூடியதாகவும் மாற்றும்.
English Summary
Do you want your face to glow You can make it glow using curry leaves Do you know how