தவெக மாநாடு - தனியார் பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறையா?
private school and colleges leave tomorrow for tvk conference
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த மாநாட்டையொட்டி, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு, வாகன பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், கலை நிகழ்ச்சிகள், உறுதி மொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து விஜய் பேசுகிறார்.

இந்த மாநாட்டில் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தவெக மாநாட்டை ஒட்டி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளன. அதாவது மதுரை- தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
private school and colleges leave tomorrow for tvk conference