கூட்டணி குழப்பம் மத்தியில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்...! பாஜக வட்டாரங்களில் பரபரப்பு...!
Nayinar Nagendrans Delhi visit amidst alliance chaos There excitement BJP circles
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதே நேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.

இந்த பிரச்சனை முதலில் ஓ.பன்னீர்செல்வம் விலகிய நிலையில், அண்மையில் டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் 'நயினார் நாகேந்திரன்' நாளை மறுநாள் டெல்லி புறப்படுகிறார்.
அங்கு தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறார். இந்த கூட்டணியில் நிலவும் குழப்பத்திற்கு மத்தியில் நாகேந்திரனின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
Nayinar Nagendrans Delhi visit amidst alliance chaos There excitement BJP circles