பருவகால நிலையை அறிந்து கொள்ள ரூ 10, கோடிக்கு தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்கியதாக கூறியது பொய்யா..? நயினார் நாகேந்திரன் கேள்வி..! - Seithipunal
Seithipunal


 தமிழக அரசு, அனைவரையும் அதிகமாக குடிக்க வைக்க வேண்டும் என்று ரூ.600 கோடி டார்கெட் செய்திருந்தது. ஆனால், அதையும் தாண்டி மது விற்பனை ரூ.750 கோடி சென்று விட்டதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் காரைக்குடியில் நிருபர்கள் சந்திப்பில்  கூறியுள்ளார்.

அத்துடன், வாக்காளர் சரிபார்ப்பு முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்து நடக்கிறதாகவும், தற்போது முதல்வர் ஸ்டாலின் வாக்காளர் சரிபார்ப்பு குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதற்குக் காரணம் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டத என்றும், தோல்வி பயம் இல்லையென்றால் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் 6.30 லட்சம் ஏக்கர் பயிர் நடப்பட்டு செப்டம்பர் 05 ஆம் தேதி அறுவடை செய்வது குறித்து முதல்வருக்கு முன்கூட்டியே தெரியும். அபப்டி தெரிந்திருந்தும் அவர், 60 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. ஆனால், வேளாண்துறை அமைச்சர் பருவமழை திடீரென்று வந்ததாக கூறுகிறார் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல்ராஜன், சட்டசபையில் பேசும்போது பருவகால நிலையை அறிந்து கொள்ள ரூ 10, கோடிக்கு தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்கியதாக தெரிவித்தார். அவை எங்கே இருக்கிறது. முன்னாள் நிதியமைச்சர் கூறியது பொய்யா..? என்றும், இல்லை வேளாண்மை அமைச்சர் சொல்வது பொய்யா?. அனைத்துமே பொய்யாகத் தான் உள்ளது. என்று கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayinar Nagendran questions whether it was a lie to say that he purchased technical machinery for 10 crores


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->