'தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் நிச்சயமாக வெற்றி பெறுவோம்'. நயினார் நாகேந்திரன்..!
Nayinar Nagendran confident of winning more than 200 seats in Tamil Nadu
தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏற்கனவே அரசு ஊழியர்கள் எல்லாம் அரசிற்கு எதிராக தான் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது அதை திசை திருப்பி மடை மாற்றி, திமுக அரசு அவர்களை மிரட்டி பணிய வைத்து இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், நிரந்தர பணி கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தியவர்களை அடித்து துரத்தி வீடு வரை சென்று மிரட்டினார்கள். இன்று அவர்களை காலையில் அழைத்து சோறு போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை சரியான வகையில் இயக்கவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, நான் ஏற்கனவே நிறைய பேட்டி கொடுத்து இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்.
தமிழகத்தில் நாங்கள் 200 தொகுதிக்கு மேல் நிச்சயமாக வெற்றி பெறுவோம். குளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுக்களை அதிகமாக சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்றும் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மக்கள் தயாராகி விட்டார்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கஞ்சா, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இது ஒன்றுமே செய்யாத அரசு, விடியாத அரசுக்கு நாங்கள் முடிவு கட்டுவோம் என்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
முன்னதாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:எங்களது கூட்டணி குறித்து 2026-ஆம் ஆண்டு ஜனவரி 01-ஆம் தேதிக்கு பின்பு அறிவிப்போம். பீஹாரில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார். பிரசாந்த் கிஷோரே தட்டு தடுமாறிட்டு இருக்காரு. அவர் ஆலோசனை வழங்கி என்ன நடக்கபோகுதோ.? என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Nayinar Nagendran confident of winning more than 200 seats in Tamil Nadu