ஆ.ராசாவை கண்டித்து போராடிய பா.ஜ., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வை திமுக எம்.பி.,ஆ.ராசா அவதூறாக பேசியிருந்தார். அதனை கண்டித்து பா.ஜ., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை திமுக அரசு கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

'உள்துறை அமைச்சர் அமித் ஷா வை அவதூறாக பேசிய எம்.பி.,ஆ.ராசாவை கண்டித்து போராடிய பா.ஜ., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம்.

காவல்துறையின் அராஜகப்போக்கால் சிவகங்கை இளைஞர் அஜித் குமார் பலியான நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், இன்று காலை பா.ஜ.,நிர்வாகி பிரவீன் ராஜ் அவர்களையும், மாலையில் அறவழியில் போராடிய நமது மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியை கைது செய்துள்ளது தி.மு.க., அரசு.

சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தும் இந்த திமுக ஆட்சியின் அதிகார மமதையே 2026ல் அவர்களை வீட்டிற்கு அனுப்பும்.' என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayinar Nagendran condemns the arrest of BJP leaders and administrators who protested against Raza as the height of anarchy


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->