அடுத்தடுத்து இரண்டு காங்கிரஸ் மாநில தலைவர்கள் ராஜினாமா.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து சந்தித்து. இதையடுத்து, கட்சியை மறுசீரமை செய்யும் நடவடிக்கையை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தியின் காரணமாக காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், கூட்டணி கட்சியான கோவா முன்னிலை கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 

இதனிடையே கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோடங்கர் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்தார். 

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவைத்தார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனிடையே 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி வலியுறுத்தி நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

navjot singh sidhu resign for congress leader post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->