சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்த பிள்ளை., நாகை சௌமியாவின் திருமண கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


 சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்ட சௌமியா என்பவரின் திருமணம், நேற்று  கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையின் போது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாய் தந்தையர் இறந்த 9 மாத குழந்தையை மீட்டு எடுத்த, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பராமரிப்பில் வளர்ந்து வந்த சௌமியா என்ற பெண்ணுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாக்கை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்தி ஆசீர்வதித்தனர்.

நாகையில் சுனாமியின்போது தாய் தந்தை இழந்த பாதிக்கப்பட்ட தொண்ணூற்று ஒன்பது குழந்தைகள், அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. அவர்களில் சௌமியா மற்றும் மீன ஆகிய குழந்தைகளின் செலவு மற்றும் பராமரித்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அந்த இரு பெண் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு வரை பெற்றுத் தந்து உதவி தந்துள்ளார்.

இதில், சௌமியா 18 வயதான போது நகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி -மணிவண்ணன் தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், நேற்று சௌமியாவின் திருமணம் நடைபெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nakai sowmia marriage


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal