நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது...! - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்...! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குகள் புனையப்பட்டு, கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தவெக அரசின் நடவடிக்கையைத் தரம் தாழ்ந்த அரசியல் என்றும் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தாராபுரம் அருகே வீராச்சிமங்கலம் பிரிவுப் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ளச் சென்றனர்.

அப்போது, அந்தப் பகுதியில் பிரசாரம் செய்யக் காவலர்கள் அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது. முதல்-அமைச்சர் விஜய் அந்த வழியாக வாகனப் பேரணி மேற்கொள்ள இருப்பதால், அங்கு பிரசாரத்துக்கு அனுமதி வழங்க முடியாது எனக் காவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கார்த்திகா மற்றும் கட்சியினர், காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தங்களது தேர்தல் பிரசாரத்துக்குத் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடப்படுவதாகவும், காவலர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் பயணிக்கும் சாலையில் மறியல் செய்தது, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் வீட்டுக்குச் சென்ற தாராபுரம் காவலர்கள், அவரையும் அவரது கணவரையும் கைது செய்தனர். இந்த நடவடிக்கை நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் கடும் கண்டனம்
கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,“அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குகளைப் புனைந்து, தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் என்பது நிலையானதல்ல; எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும் அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை..! இவ்வாறு சீமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Naam Tamilar Party executive Karthika and her husband arrested Seeman strongly condemns tvk government


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->