முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய நிர்வாகி...! - மேடையிலேயே தடுத்து நிறுத்தி கண்டித்த கனிமொழி...!
administrator who spoke unison Chief Minister Vijay Kanimozhi who stopped and condemned him stage
சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய கட்சியின் மகளிர் அணி நிர்வாகிக்கு, கனிமொழி எம்.பி. மேடையிலேயே கண்டனம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் பேசும் விதத்தைப் பின்பற்றி நாமும் நமது தரத்தைத் தாழ்த்திக்கொள்ளக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.சென்னையில் முன்தினம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், மேயர் பிரியா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, திமுக மகளிர் அணி நிர்வாகி சுதா தீனதயாளன், முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கனிமொழி, அதே மேடையில் அந்த நிர்வாகியின் பேச்சைக் கண்டித்து கருத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியதாவது,"நம்முடைய எதிரிகள் யார் என்பதை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்மை உருவாக்கிக்கொள்ளக் கூடாது.
அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்; அதுதான் அவர்களுடைய தரம்.நாம் முப்பெரும் விழாவைக் கொண்டாடும் திராவிட இயக்கத்தின் வழிவந்தவர்கள்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் கொள்கைப் பாதையில் பயணிப்பவர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துப் பேச வேண்டும். நம்முடைய பேச்சிலும் செயலிலும் அந்தப் பண்பாடு வெளிப்பட வேண்டும் என்பதையே நான் கோரிக்கையாக முன்வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
English Summary
administrator who spoke unison Chief Minister Vijay Kanimozhi who stopped and condemned him stage