காவல்துறையின் பாதுகாப்பில் கைதி மரணம்...! தவெக அரசு பொறுப்பேற்க வேண்டும்...! - நயினார் நாகேந்திரன் ஆவேசம் - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவலர்கள் கண்காணிப்பில் இருந்த கைதி உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கைதி, காவலர்களின் கண்காணிப்பில் இருந்தபோதே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பில் இருந்த ஒருவருக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிரிழப்பு பொதுமக்கள் மத்தியிலும், உறவினர்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களின் முழுமையான கண்காணிப்பில் இருந்த கைதி, கழிப்பறைக்குச் சென்றபோது தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படும் தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

24 மணி நேரமும் கண்காணிப்பில் இருந்த ஒருவரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது ஏன்? பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் அலட்சியம்தான் இதற்குக் காரணமா அல்லது இந்த மரணத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில், காவலர்களின் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கே உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டிருப்பது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் சீர்குலைந்துள்ளதைக் காட்டுகிறது.எனவே, சங்கரலிங்கத்தின் மரணம் குறித்து எவ்வித ஒளிவுமறைவுமின்றி முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாதுகாப்புப் பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prisoner dies police custody government must take responsibility Nainar Nagendiran furious


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->