நவம்பர் 15-ஆம் தேதி தண்ணீர் மாநாடு - சீமான் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


 சுற்றுச்சூழல் பாதுகாப்பு: நாம் தமிழர் கட்சியின் 'தண்ணீர் மாநாடு' – சீமான் அறிவிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி (NTK), ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு எனத் தொடர்ச்சியாகப் பல கருப்பொருள் சார்ந்த மாநாடுகளை நடத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மற்ற கட்சிகள் அரசியல் பரப்புரைகளில் கவனம் செலுத்த, சீமானின் இந்தச் சுற்றுச்சூழல் மாநாடுகள் பேசுபொருளாகி உள்ளன.

இந்த வரிசையில், தற்போது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 'தண்ணீர் மாநாட்டை' நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"உயர்ந்த விற்பனைப் பண்டமாக, அதிக இலாபம் ஈட்டுகிற சந்தைப் பண்டமாகத் தண்ணீர் மாறி இருப்பது மிகவும் ஆபத்தான போக்கு. இந்த அவலங்களை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'தண்ணீர் மாநாடு-2025' நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும்."

"ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு" என்ற முழக்கத்தை முன்வைத்து, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில், வரும் நவம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

naam tamilar katchi Seeman maater manadu


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->