8 பால், 8 சிக்ஸர்... 11 பந்துகளில் அதிவேக அரைசதம்... கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் புதிய சாதனை புரிந்த ஆகாஷ் சௌதரி!
Ranji Trophy 8 ball 8 six 11 ball 50
ரஞ்சி கோப்பை பிளேட் குரூப் போட்டியில் மேகாலயா அணிக்காக விளையாடிய வீரர் ஆகாஷ் சௌதரி, வெறும் 11 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து முதல் தர கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
அருணாசலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில், மேகாலயா அணிக்காக 8-வது வீரராகக் களமிறங்கிய ஆகாஷ் சௌதரி, முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்த அவர், அதன்பின் தான் சந்தித்த தொடர்ச்சியான 8 பந்துகளிலும் 8 சிக்ஸர்கள் விளாசி அதிவேகமாக அரைசதம் கடந்தார். அவர் மொத்தம் 14 பந்துகளில் 50 ரன்களுடன் களத்தில் இருந்தார். மேகாலயா அணி 6 விக்கெட் இழப்புக்கு 628 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
முறியடிக்கப்பட்ட சாதனைகள்
அதிவேக அரைசதம்: இதற்கு முன்பு, முதல் தர போட்டிகளில் 2012-ல் வயன் வொயிட் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை ஆகாஷ் சௌதரி முறியடித்துள்ளார்.
ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள்: மேலும், சர் கர்ஃபீல்டு சாபர்ஸ் (1968) மற்றும் ரவி சாஸ்திரி (1984-85) ஆகியோருக்கு அடுத்தபடியாக, முதல் தர போட்டிகளில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் ஆகாஷ் சௌதரி பெற்றுள்ளார்.
English Summary
Ranji Trophy 8 ball 8 six 11 ball 50