எதிர்கட்சிகளை பலவீனமாக பார்க்கவில்லை... தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைக்கும் - முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
DMK MK Stalin ADMK EPS TVK
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அத்துடன், ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:
பழனிசாமியின் விமர்சனம்: "எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து எனக்குக் கவலையில்லை. அவருக்கு வேறு வேலை இல்லாததால்தான், அவர் தி.மு.க.வை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்; மீண்டும் தி.மு.க.தான் ஆட்சியை கைப்பற்றும்."
தேர்தல் சவால்கள்: "எத்தனை முனைப் போட்டி வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சியே அமையும். எதிர்க்கட்சிகளை நாங்கள் பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் பணியை மட்டுமே செய்து வருகிறோம்."
வாக்காளர் பட்டியல்: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராகத் தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
English Summary
DMK MK Stalin ADMK EPS TVK