மோடி சரணடைந்தார்...! - ராகுல் காந்தி கடும் தாக்கு, வர்த்தக விவகாரத்தில் அரசியல் விமர்சனம் ...!
Modi surrendered Rahul Gandhi attacks criticizes politics trade issue
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை, சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் கணிசமாக உயர்த்தி அறிவித்தது. உலக நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னிலை பிடிக்கவும், அதிக ஒத்துழைப்புகளைப் பெறவும் இந்த கூடுதல் வரிகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன.

இதன் விளைவாக, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த இந்தியா உட்பட பல நாடுகள் பொருளாதார அழுத்தத்தை சந்தித்தன.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி இந்த வரிகளை விதித்துள்ளார் என்ற காரணத்தால், அந்த நடவடிக்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து, “பிரதமர் சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
அந்த தளர்வு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் வலுவான பேச்சுவார்த்தை நடத்த முடியாது; மீண்டும் சரணடையும் நிலையே உருவாகும்” என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாகவே இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவுகளை கடுமையாக சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Modi surrendered Rahul Gandhi attacks criticizes politics trade issue