பட்ஜெட் கூட்ட தொடருக்கு சைக்கிளில் வந்த தமிழக எம்.எல்.ஏ!  - Seithipunal
Seithipunal


2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (23.02.2021) காலை கூடியது. கடந்த முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றது. இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் அதே கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறுகிறது. 

இன்றைய நாளில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக சபை தொடங்கியதுமே திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.ஜ.க பொதுச்செயலாளரும், நாகபட்டினம் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு சைக்களில் வந்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சைக்கிளில் பதாகை ஒன்றையும் கட்டியிருந்தார். இவர் கடந்த முறை சட்டசபைக்கு வந்த போது அழுகிய நெற்கதிருடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLA Thamimun ansari came by bicycle to assembly


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal