சோகத்தில் அரசியல் களம் - ஆளும் கட்சி எம்எல்ஏ திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் கானாப்பூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் அனில் பாபர். சிவசேனா ஷிண்டே பிரிவைச் சேர்ந்த இவர், உடல்நலக் குறைவால் சாங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவரது மறைவைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கானாப்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அனில் பாபர் காலமானார். 

அவரது மறைவின் மூலம் சிவசேனாவின் சமூக தொண்டு செய்யும் மிகவும் திறமையான மக்கள் பிரதிநிதியை இழந்துள்ளோம். அனில் பாபரின் இறுதிச் சடங்குகளை ஒரு அரசு நிகழ்வாக நடத்த, நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கானாப்பூர் தொகுதியில் சிவசேனாவுக்காக அவர் செய்த பணிகள் மறக்க முடியாதவை. 

வீடற்றவர்களுக்கு வீடு வழங்க முயற்சிப்பது, ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்வது, கிருஷ்ணா பள்ளத்தாக்கு நீர் திட்டத்தை செயல்படுத்துவது, அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்கச் செய்வது என தனது பணிகள் மூலம் அனில் பாபர் ஒரு முன்மாதிரியான மக்கள் பிரதிநிதியாக பணியாற்றினார்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla anil babar passed away in maharastra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->