தேர்தல் களம் குதிக்கும் மு.க ஸ்டாலின்.!! உற்சாகத்தில் திமுக உடன்பிறப்புகள்.!!
MKStalin starts loksabha campaign from March23 in thiruvarur
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக தலைமையில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு எந்தெந்த தொகுதியில் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இன்று கையடித்தாக உள்ளதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கும் இத்தகைய சூழலில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் திருவாரூரில் இரந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் மார்ச் 23ஆம் தேதி மக்களவை பொது தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை தனது தந்தை பிறந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து தொடங்குகிறார். இதனால் திமுகவின் உடன்பிறப்புகள் உற்சாகமடைந்துள்ளனர்.
English Summary
MKStalin starts loksabha campaign from March23 in thiruvarur