அதிரடி திருப்பம்.. "அண்ணாமலை, எடப்பாடி" மீது வழக்கு.. இறங்கி அடிக்கும் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் கைப்பற்றப்பட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தேசிய வாதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது அவர் ஏழு நாள் விசாரணை காவலில் இருந்து வருகிறார்.

இத்தகைய பரபரப்பான நிலையில் அவர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடன் எடுத்துக் கண்ட புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் முதல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குடும்பத்தினர் வரை பலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் முதலமைச்சருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கையில் ஏந்திய படி தமிழக முதலமைச்சர் மு‌.க ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் போதைப் பொருள் கடத்தல் மன்னனுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாவது கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடம் முதல்வருக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையிலும் எடப்பாடி பழனிச்சாமி அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ்(அவதூறு பரப்புதல், அவதூறு வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்கு உரிய கிரிமினல் குற்றமாகும். எனவே முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கருத்துகளை வெயிட்ட எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதே போன்று கடந்த மாதம் 29ம்தேதி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதை பொருள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அனைத்துமே பொது வெளியில் சர்வசாதாரணமாக கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 33 மாத காலத்தில் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது'' என்று தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த அறிக்கை தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் மக்களிடையே உள்ள நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது.

 மேலும் தமிழகத்தை கஞ்சா பயிரிடப்படாத மாநிலமாக மாற்றி வருகிறார் மு.க ஸ்டாலின் . ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் கஞ்சா வருவதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடுமையான நடவடிக்கையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். போதை பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே பொய்யான கருத்துகளை அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை வெளியிட்டுள்ள அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மற்றொரு மனமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும் விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin filed case against EPS and Annamalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->