குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் - தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும், அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றித் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin Meet vice President jagadeep thangar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->