ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு. க ஸ்டாலின்... நிலையான தலைவர்கள் அதிமுகவில் இல்லை...! - அன்வர் ராஜா
MK Stalin is a leader without equal There are no stable leaders in AIADMK Anwar Raja
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ''அன்வர் ராஜா'' தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் தி.மு.க.வில் இணைந்தது தொடர்பாக அன்வர் ராஜா நிருபர்களிடம் தெரிவித்ததாவது,' ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார். அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை.
இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை. இம்முறை 15% கூடுதல் வாக்குகள் பெற்று தி.மு.க. வெல்லும்.
கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி" என்று தெரிவித்தார்.
English Summary
MK Stalin is a leader without equal There are no stable leaders in AIADMK Anwar Raja