திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்ததா..? தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டை விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின்..!
MK Stalin criticizes the Tvk governments agricultural budget
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 06) தாக்கல் செய்து, உரை நிகழ்த்தினார்.
இந்நிலையில், ''திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?'' என தவெக அரசின் வேளாண் பட்ஜெட் 2026 -27 ஐ திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழக வேளாண் பட்ஜெட். மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.
திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா விவசாயிகளுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
MK Stalin criticizes the Tvk governments agricultural budget