தன் சொந்த சாதியை வைத்து முக ஸ்டாலின் தீட்டிய சதித்திட்டம்.! உச்சகட்ட கொந்தளிப்பில் வன்னியர்கள்.! - Seithipunal
Seithipunal


நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம் என்று மு க ஸ்டாலின் மேடையில் பேசி கொண்டே, 
ஒரு பக்கம் கிடைத்த தனி இட ஒதுக்கீட்டுக்கு உலை வைக்க வழக்குத் தொடர, திமுக வேலை செய்து கொண்டு இருப்பதாக, சமூக வலைத்தளங்களில் வன்னியர் சமூக மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வெளியான அந்த பதிவுகளில், 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக கடந்த ஆறு மாதங்களாக போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தது பாமகவின் இந்த போராட்டம் காரணமாக போராட்டம் காரணமாகவும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் அதிமுகவுடன் கூட்டணி என்று நிபந்தனை மூலமாகவும் தற்போது வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் திமுக வன்னியர்களின் வாக்குகளை குறி வைக்கும் நோக்கத்திலும், அதிமுகவுக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்த வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும், மற்ற சமூக மக்களையும் தூண்டிவிடும் செயலில் இறங்கி உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் தந்து சொந்த சமூகமான (சாதி) இசை வேளாளர் சமூகத்தை தூண்டிவிட்டு, வழக்கு போடுவதற்கு உண்டான நடவடிக்கைகளை நேரடியாகவே களமிறங்கியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

திமுக தலைவரின் சொந்த சமூகமான இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 'இசை வேளாளர் இளைஞர் பேரவை' நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. அதன்படி இசை வேளாளர் இளைஞர் பேரவை திருச்சியில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மு க ஸ்டாலின் மைத்துனரும், துர்கா ஸ்டாலின் சகோதரருமான ராஜமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி உள்ளார்.

இதைவிட ஒருபடி மேலே சென்று ஸ்டாலின் மகன் உதயநிதியின் வலது காரமும், திமுகவின் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல் திமுகவை சேர்ந்த ஒரு சில முக்கிய புள்ளிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வன்னியர்களுக்கு எப்படியேனும் இந்த இட ஒதுக்கீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து உள்ளனர். தடுத்து நிறுத்தாவிட்டால் வன்னியர்களின் வாக்கு நமக்கு (திமுக) வராது. அதனால் இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று சூளுரைத்து உள்ளனர்.

திமுகவின் இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம், வன்னியர் சமூக மக்களிடையே தீயாக பரவி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களுக்கும் இந்த செய்தி தெரிய வந்து விட்டது. இந்த நிலையில் திமுகவில் உள்ள வன்னிய சமூக மாவட்டச் செயலாளர்கள், எப்படி நாம் சென்று ஓட்டு கேட்பது. கிடைத்த தனி இட ஒதுக்கீட்டையும் திமுக இப்படி வழக்குப் போட்டு தடுக்க இருப்பதால் வன்னியர் சமூக மக்கள் இளைஞர்கள் கொந்தளிப்பில் இருப்பார்களே., தொகுதிக்குள் நான் எப்படி போக முடியும் என்று அச்சத்தில் உள்ளனராம்.

திமுகவை சேர்ந்த வன்னியர் அல்லாத மாற்று சமூகத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் கடும் அச்சத்தில் உள்ளனராம். இது குறித்தான வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்களும், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் செய்தி திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், வன்னியர் சமூக மக்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாள் நாங்கள் தொகுதிக்கு உள்ளேயே செல்லமுடியாது. இதனை நீங்கள் உடனே கைவிட வில்லை என்றால் வன்னியர்களின் ஒரு வாக்கு கூட திமுகவுக்கு கிடைக்காது. ஆட்சிக்கு வந்ததும் இதனை பார்த்து கொள்ளலாம் என்று  திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN against vanniyars


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal