ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்...! - சென்னை மற்றும் நெல்லை இடையே இன்று ஸ்பெஷல் மெமு எக்ஸ்பிரஸ் இயக்கம்...! - Seithipunal
Seithipunal


கோடை காலப் பயண உச்சநெரிசலை சமாளிக்கும் நோக்கில், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் சென்னை – நெல்லை இடையே முன்பதிவு தேவையில்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்படுவது என்னவெனில்,"சென்னை எழும்பூரிலிருந்து ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ், மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மறுமார்க்கப் பயணமாக, நெல்லையிலிருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் இந்த ரெயில், ஏப்ரல் 26-ஆம் தேதி மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த சிறப்பு ரெயில் கொடைக்கானல் ரோடு, சாத்தூர், கோவில்பட்டி,மதுரை, விருதுநகர், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம்,தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,  திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று சேவையை வழங்கும்" என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Happy news train passengers Special MEMU Express running between Chennai and Nellai today


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->