நோ ரீ-போலிங்...! தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியமே இல்லை...! - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
No re polling There no need re polling Tamil Nadu Election Commission announces action
தமிழகத்தின் 234 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி விறுவிறுப்பாக நிறைவடைந்தது. இந்த ஜனநாயகப் பெருவிழாவில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்தனர். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், சில பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தில் சிறிய அளவிலான பதற்ற சம்பவங்களும் தொழில்நுட்ப தடைகளும் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் அமைந்த வாக்குச்சாவடி ஒன்றில் தலைமைக் காவலர் ஒருவர் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளில் வாக்குப்பதிவு முறையாக நடைபெற்றதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.மேலும், சென்னை ஹார்பர் தொகுதியில் தி.மு.க. மற்றும் தவெக (TVK) வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே ‘பூத் ரிக்ஜிங்’ எனப்படும் வாக்கு முறைகேடு குறித்த மோதல் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் அதிகாரிகளால் ஆராயப்பட்டு வருகின்றன.இதேவேளை, சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. பின்னர் அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு சீராக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பழுதடைந்த மாதிரி இயந்திரம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தது.
ஆனால், இம்முறை தமிழகம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் எதிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற பரிந்துரை முன்வராததால், மறுவாக்குப்பதிவு தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுபோலவே, மேற்கு வங்க மாநிலத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் உள்ள 44,376 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அனைத்தும் தேர்தல் செயல்முறை பெரும்பாலும் சீராக நடைபெற்றதை உணர்த்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
No re polling There no need re polling Tamil Nadu Election Commission announces action