ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​கள்; அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மன்​னிப்பு கேட்க வேண்​டும்; செய்​யத் தவறி​னால்...? சபரீசன் நோட்டிஸ்..! - Seithipunal
Seithipunal


''மு.க.ஸ்​டா​லினின் மரு​மகன் என்ற ஒரே காரணத்​துக்​காக அடிப்​படை ஆதா​ரமற்ற, உள்​நோக்​கத்​துடன் கூடிய, உண்​மைக்கு புற​மான கருத்​துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி, அமைச்​சர்​கள் ஆதவ் அர்ஜுனா, நிர்​மல்​கு​மார் ஆகியோர் மன்​னிப்பு கேட்க வேண்டும்''என சபரீசன் தரப்​பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ள நிலையில், அதில் கூறப்​பட்​டுள்ளதாவது: 

''தமிழகத்​தின் முக்​கிய கட்​சிகளில் ஒன்​றான திமுக குறித்​து, சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பிருந்தே ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​கள் மூலம் தவெக நிர்​வாகி​கள் விமர்​சித்து வந்​துள்​ளனர். மு.க.ஸ்​டா​லினின் மரு​மகன் என்ற ஒரே காரணத்​துக்​காக அடிப்​படை ஆதா​ரமற்ற, உள்​நோக்​கத்​துடன் கூடிய, உண்​மைக்கு புற​மான கருத்​துகளை 2 அமைச்​சர்​களும் தெரி​வித்​துள்​ளனர்.

தனது நேர்​மை, பொது சேவை, உண்​மை​யான, நேர்​மை​யான, அர்ப்​பணிப்புமிக்க செயல்​பாடு​களின் மூலம் தனிப்​பட்ட, சமூக, தொழில் ரீதி​யான வாழ்க்கை ஆகிய​வற்​றில் களங்​கமற்ற நற்​பெயரை கொண்​டுள்ள சபரீசனுக்கு எதி​ராக, அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜுனா மற்​றும் நிர்​மல்​ கு​மார் ஆகியோர் ஜூன் 25-ம் தேதி நடந்த ஊடக சந்​திப்​பில் தெரி​வித்த கருத்​துகள் தொலைக்​காட்​சிகள் மற்​றும் சமூக ஊடகங்​களில் பரவி நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்தி உள்​ளன.

எனவே இரு அமைச்​சர்களும் தங்​களது கருத்துகளை உடனடி​யாக திரும்​பப்​பெறு​வதுடன், அதே ஊடகங்​கள் முன்​பாக மன்​னிப்பு கேட்க வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட வீடியோ பதிவு​களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்; எதிர்​காலத்​தில் சபரீசனுக்கு எதி​ராக கருத்​துகளை வெளி​யிட மாட்​டோம் என நிபந்​தனையற்ற உறு​தி​மொழியை எழுத்​துப்​பூர்​வ​மாக வழங்க வேண்​டும். இவற்றை 15 நாட்​களுக்​குள் செய்​யத் தவறி​னால் சட்​டரீ​தி​யான நடவடிக்​கையை இரு அமைச்​சர்​களும் சந்​திக்க நேரிடும்'' என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ministers Adhav Arjuna and Nirmal Kumar must apologize says Sabarisan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->