மனசாட்சியே இல்லையா ஸ்டாலின்! ஸ்டாலினுக்கு அமைச்சர் கொடுத்த பதிலடி! திமுக பதிலடி கொடுக்குமா? - Seithipunal
Seithipunal


இன்று, சென்னை அரசு பொது மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து - டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கொடுமையும் நடந்திருக்கிறது. இந்த சென்னை அரசு பொது மருத்துவமனையில் மட்டும், டெங்குவால் பாதிக்கப்பட்ட 31 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஆண்கள் 17 பேரும், பெண்கள் 14 பேரும் ஆவர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் என்கிற விபரத்தைக் கூட இந்த அரசு வெளிப்படையாகத் தராமல், மிகச் சர்வ சாதாரணமாக, "மர்மக் காய்ச்சல் வந்திருக்கிறது" என்று ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளித்திட வேண்டும் என தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் "மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை, காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து எந்த காய்ச்சல் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 210 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை. 

மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு. அரசு மருத்துவமனைகளில் எந்த நேரத்திலும், யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் எனவும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மனசாட்சி இல்லாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது" எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். 

மேலும் கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித்துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி. எனவே உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் சேர்ந்து டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என கூறினேன்; நான் கூறிய கருத்தில் தவறில்லையே? எனவும் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Vijayabaskar replies to stalin in dengue issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal