ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை சமூக நீதித் துறை என பெயர் மாற்றம் செய்ததில் அதிருப்தி..? அமைச்சர் வன்னி அரசு பதில்..!
Minister Vanni Arasu responds to governments change of name to Department of Social Justice
''ஆதி திராவிடர் நலத் துறையின் பெயரை சமூக நீதித் துறை என பெயர் மாற்றம் செய்தது வருத்தமளிக்கிறது'' என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ''எங்களுடைய தலைவரின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடும்'' என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான வன்னி அரசு கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து கூறியதாவது;
தமிழகம் முழுவதும் சமூக நீதித் துறைக்கு உட்பட்ட விடுதிகளில் மின்தடை ஏற்பட்டால் இன்வெர்ட்டர் வழங்கவும், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'ஆதி திராவிடர் நலத் துறை' பெயரை 'சமூக நீதித் துறை' என பெயர் மாற்றம் செய்தது வருத்தமளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். எங்களுடைய தலைவரின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளில் வழங்கப்படும் டைரிகளில் சாதி பெயர் கேட்கப்படுவது குறித்து தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். சாதி தொடர்பான அணுகுமுறை மற்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்று அடிப்படையில் செயல்படுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோவையில் அம்பேத்கர் சிலை விரைவில் நிறுவப்படும் என்றும், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக பெயர் விவரம் சேகரிக்கப்படுகிறதாகவும், விரைவில் விடுதலை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரட்டை குவளை முறை எங்காவது இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் தேவைகள், கோரிக்கைகள் குறித்து மலைப்பகுதிக்கு சென்று கேட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விசிக மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ''அண்ணன் வைகோவை எப்பொழுதும் நேசிக்க கூடியவர்கள் நாங்கள். அவர் எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் அவரை நாங்கள் நேசித்துக் கொண்டிருப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Vanni Arasu responds to governments change of name to Department of Social Justice