''ஆளுநரின் செயல் அரசியலமைப்புக்கே களங்கம்''; தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் பாடப்பட்டமைக்கு தவெக அரசின் சமூகநீதிதுறை அமைச்சர் வன்னியரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, பிரபல செய்திசேவைக்கு அமைச்சர் வன்னி அரசு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து அம்பேத்கர் ஏற்றித்தந்த சட்டத்திற்கு எதிராகவே செயல் பட்டுவருகிறதாகவும், புதிய சனாதன சட்டத்தின் மூலம், இந்து, இந்தி, இந்துராஷ்டிரத்தை இலக்காக வைத்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார். 

அத்துடன், அந்த இலக்கை நோக்கி நகர்வதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள் என்றும், அதன்படியே வந்தேமாதரம் எனும் திணிப்பும் இருக்கிறது என்றும், ஆளுநரின் இந்தப் போக்கு ஏற்புடையது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணிய சுந்தரனாரின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திற்கே ஆளுநர் இப்படியான ஒரு அவமானத்தை ஏற்படுத்துகிறார் என்றால், இவரது செயல் அரசியலமைப்புக்கே களங்கம் விளைவிப்பது என்பதே என் குற்றச்சாட்டு'' என கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vanni Arasu criticizes Governors action on Tamil Thaai Vaazhthu issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->