ஸ்டாலின் ஆட்சியில அதுக்கு மட்டும் பஞ்சமே இல்ல.. அமைச்சர் மேடையில் பேச்சு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் சாரல் திருவிழா கொண்டாடப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா வைரஸ் பரவல் இந்த சாரல் திருவிழா நடக்காமல் இருந்து வந்தது.

மூன்றாண்டுகளுக்குப் பின் இன்று இந்த சாரல் திருவிழா துவங்கியது. இதில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,பல வரலாற்று சிறப்புமிக்க இடம் குற்றாலம். அருவிகள் ஆர்ப்பரித்து என்ற தென்றல் தாலாட்டு என்று குற்றாலத்திற்கு இலக்கியங்களில் சிறப்பான இடம் உண்டு. சில நேரங்களில் சாரல் மழை இருக்காது. 

தண்ணீர் வராமல் கூட சாரல் விழா நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது சாரல் திருவிழா களை கட்டியிருக்கிறது. ஸ்டாலின் ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சமே இல்லை. மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று காத்திருந்த காலம் போய் மேட்டூர் அணையிலிருந்து எக்கச்சக்க தண்ணீர் வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Thangam Thennarasu about Stalin Period


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->