''மேகதாது விவகாரம் குறித்து ஒன்றிய இணையமைச்சர் புரிதல் இல்லாமல் பேசியுள்ளார்''; அமைச்சர் என்.ஆனந்த்..!
Minister N Anand says the Union Minister spoke without understanding about the Meghedathu issue
மேகதாது விவகாரம் குறித்து ஒன்றிய அமைச்சர் புரிதல் இல்லாமல் பேசியுள்ளதாகவும், அதுகுறித்து சட்ட வல்லுநரிடம் ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து ஈசிஆர் சாலையை இணைக்கும் கே. கே. சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அதிக அளவில் ஆகாயத்தாமரை காணப்படுகின்றது. இதன்காரணமாக நீரோட்டம் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி நீர் கடத்தும் திறனையும் குறைக்கின்றது.
அத்துடன், வரும் மழைக்காலங்களில் நீர் தேக்கமின்றி கடந்து செல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படாமல் இருக்க நீர்வளத்துறை அமைச்சர் உத்தரவின்படி பக்கிங்காம் கால்வாயில் அமைந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் கழிவு பொருட்கள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றது.

குறிப்பாக, மழைக்காலங்களில் மழைநீர் தடை இன்றி சென்று கடலில் கலக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பக்கிங்காம் கால்வாயை தூர்வாரும் பணியை அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் என்.ஆனந்த் பேசும்போது கூறியதாவது;
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, தமிழகம் உட்பட பிற மாநிலங்களின் ஒப்புதல் கர்நாடகாவுக்கு தேவையில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி புரிதல் இல்லாமல் பேசியுள்ளார். நாங்கள் சட்ட வல்லுநரிடம் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister N Anand says the Union Minister spoke without understanding about the Meghedathu issue