தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க போகும் கொரோனா.. அமைச்சர் அதிர்ச்சித் தகவல்.!! - Seithipunal
Seithipunal


நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. ஆகையால், எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்திற்கும் குறைவாகவே படுக்கைகள் நிறைந்துள்ளனர். மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 

பொங்கல் விடுமுறைக்கு பிறகு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 100% பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 90 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ma subramanian press meet about corona increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->