சசிகலா விடுதலை குறித்து அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி..! சசிகலா வெளியே வந்ததும் இது தான் நடக்கும்.!! - Seithipunal
Seithipunal


பெரியாரின் 142 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 142 பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

அதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம். சசிகலா விடுதலை என்பது சட்டப்படி நடைபெறும். சசிகலா வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar press meet 17 spetember 2020


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal