தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் ; ஒன்றிய அரசு தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி அரசுக்கு நெருக்கடியை கொடுக்க நினைக்கிறது; அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு..!
Minister Arunraj says the Union government is trying to create controversy and create pressure on the Tamil Thaai Vaazhthu issue
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் பாடப்பட்டதற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது;
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டியது தொடர்பாக அரசு சார்பாகவும் தமிழக வெற்றிக்கழகம் சார்பாகவும் ஏற்கனவே கூறியுள்ளோம் என்றும், தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம். ஒன்றிய அரசு தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி அரசுக்கு நெருக்கடியை கொடுக்க நினைக்கிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்றும், ஆளுநர் ஒன்றிய அரசு சொல்லித்தான் செய்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கண்டனம் தெரிவித்து பதிலளித்துள்ளார்.
English Summary
Minister Arunraj says the Union government is trying to create controversy and create pressure on the Tamil Thaai Vaazhthu issue