ஆணவப்பேச்சு.!! உடனடியாக அவரை நீக்க வேண்டும்.!! கொந்தளிக்கும் வைகோ.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் பாரதியார் மண்டபத்தில் நேற்று நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 100 மாணவர்களை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சேலத்தை சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது கையெழுத்து விடுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தமிழக ஆளுநர் "நீட் தேர்வுக்கு தடை விதிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. பள்ளியில் படிக்கும் போது பயிற்சி பெற்றால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்" பதிலளித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கையெழுத்து இட்டு குடியரசு தலைவருக்கு அனுப்புவது தான் ஆளுநருக்கு உள்ள அதிகாரம். 

அரசியல் சட்டத்தை மீறி தான்றோன்றி தனமாக பேசும் ஆளுநரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்க கோரி தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தை மதிமுக நடத்தி வருகிறது. ஆளுநரின் ஆணவப் பேச்சு அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தி உள்ளது" என ஆளுநருக்கு எதிராக கொந்தளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK vaiko criticized TN Governor Ravi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->