மதிமுகவில் இருந்து மாநிலத் துணைச் செயலாளர் நீக்கம்.. வைகோ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து மாணவரணி மாநில துணை செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அப்போது பதிவான வாக்குகள் கடந்த 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. மேலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவும் குறிப்பிட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் பொ.பழனிவேல் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் செயல்படுவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப் படுகிறார் என வைகோ அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk member dismissal for party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->