"அன்பு அண்ணன் உதயநிதிக்கு.!" மேயர் பிரியாவின் வாழ்த்து செய்தி.!  - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டவர் உதயநிதி ஸ்டாலின். அதில், வெற்றிபெற்று எம்எல்ஏ, ஆனார். அதன் பிறகும் அவர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். 

அப்போதே அவர் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து இப்போது தான் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பதற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.இன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். 

 உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பல்வேறு தலைவர்களும் திமுகவினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மேயர் பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில், "அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும்  அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mayor Priya wishes To udhayanithi Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->