மாஸ்டர் பிளான் 2026! - தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் சுற்றுப்பயணப் பொறுப்பாளர்கள் நியமனம்! - அண்ணாமலை, எல்.முருகன்
Master Plan 2026 Annamalai and L Murugan election arena BJP appoints tour coordinators
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கோட்டைகளை வலுப்படுத்துவதில் அரசியல் கட்சிகள் படுவேகமாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆளும் தரப்பை வீழ்த்த, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்துள்ளது. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் த.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன.

தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, பா.ஜ.க. குறிவைக்கும் முக்கியத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடச் சிறப்புப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
இதன்படி, களப்பணிகளை ஒருங்கிணைக்கும் சுற்றுப்பயணப் பொறுப்பாளர்களாக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாமலை அவர்கள் சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 நட்சத்திரத் தொகுதிகளைக் கவனிப்பார். அதேபோல், எல்.முருகன் அவர்கள் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு மற்றும் உதகமண்டலம் ஆகிய 5 முக்கியத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை வழிநடத்துவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிகள் ஒரு பார்வையில்:பொறுப்பாளர்தொகுதிகள்அண்ணாமலை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம்
எல். முருகன் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம்
English Summary
Master Plan 2026 Annamalai and L Murugan election arena BJP appoints tour coordinators