மார்கண்டேயன் கைது ஜனநாயக விரோதம்...தவெக அரசுக்கு மக்கள் தக்க பதிலளிப்பார்கள்...! - கனிமொழி கண்டனம் - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுதல் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக மூன்று பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது,"விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கை ஜனநாயக மரபுகளுக்கு முரணானதும், அதிகார அத்துமீறலின் வெளிப்பாடுமாகும்.

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாமல், தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் மீது காவலர்களை பயன்படுத்தி ஒடுக்க முயலும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

மக்களின் குரலை அடக்க நினைக்கும் இதுபோன்ற அதிகாரப் போக்கிற்கு ஜனநாயக வழியிலேயே மக்கள் தக்க பதிலளிப்பார்கள். கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனை எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Markandeyan arrest anti democratic people give befitting reply government Kanimozhi condemns


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->