வெறுப்பு பிரச்சாரம் செய்யும் அண்ணாமலையே பாதுகாப்பாக உள்ளார்! அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி! - Seithipunal
Seithipunal


செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக புகார் மனுவையும் தமிழக ஆளுநரிடம் வழங்கினார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பான சூழல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. 

அண்ணாமலை போன்றவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்து வெறுப்பு பிரச்சாரத்தை கக்கி வருகின்றனர். தமிழக மக்களை பிரிக்கின்ற முயற்சியில் ஈடுபடும் அவர்களுக்கே நல்ல பாதுகாப்பு இருக்கிறது. அவ்வாறு இருக்கும் சூழலில் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க இந்த அரசுக்கு தெரியாதா? 

தமிழக மக்களே அண்ணாமலை சொல்வது எவ்வளவு வேடிக்கையானது என்பதை உணர்வார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்புடன் இருக்கின்றான். பிரதமரை பாதுகாப்பதற்கு தமிழக அரசுக்கு தெரியாதா? 

அதை எங்களுக்கு அண்ணாமலை கற்றுத் தரப் போகிறாரா? இந்த அரசு என்ன எல்கேஜியில் இருக்கிறதா? தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட ஒரே கட்சி திமுக. இதையெல்லாம் எங்களுக்கு அண்ணாமலை சொல்லித் தர வேண்டாம் என அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mano Thangaraj retorts Dont teach Annamalai about PMs security


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->